Friday 3rd of May 2024 07:47:07 PM GMT

LANGUAGE - TAMIL
-
“பிரட்டிஷ் கூலிப்படையினரின் தமிழினப் படுகொலைகள்” புத்தகமாகியது!

“பிரட்டிஷ் கூலிப்படையினரின் தமிழினப் படுகொலைகள்” புத்தகமாகியது!


இலங்கையில் பிரிட்டிஷ் கூலிப்படையினர் நிகழ்த்தியதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து லண்டன் பெருநகர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலனாய்வு ஊடகவியலாளா் பில் மில்லர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக் கொண்டு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் இங்கிலாந்து கூலிப்படையினா் இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளித்ததாகவும் பரபரப்புத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த கீனி மீனி சேர்வீசஸ் (Keenie Meenie Services or KMS) என்ற தனியார் நிறுவனத்தின் ஆயுதப் படைகள் செய்த கொடூரங்கள் குறித்து ஆய்வு செய்த புலனாய்வு ஊடகவியலாளா் பில் மில்லர் இந்தத் தகவல்களை புத்தகமாக வெளியிட்டார்.

இந்தப் புத்தகத்தில் 1980-ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற போரின் ஆரம்பத்தில் KMS கூலிப்படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய போர்க்குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலைகளில் ஈடுபட்ட பின்னரும் தண்டனையில் இருந்து அவா்கள் எவ்வாறு தப்பினார்கள்? எனவும் இந்தப் புத்தகத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சோ்ந்த KMS என்ற கூலிப்படையினர் இலங்கையின் பொலிஸ் விசேட அதிரடைப் படையினருக்கு பயிற்சி அளித்ததுள்ளதாகவும் அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் கொக்கட்டிச்சோலையில் இறால் பண்ணை ஒன்றில் 1987-ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையில் இந்தக் கூலிப்படையனருக்கு உள்ள தொடா்புகள் குறித்து இதில் விபரிக்கப்பட்டுள்ளது. இதில் 85 ஆப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று 1985 ஆம் ஆண்டில் பிரமந்தனாறு கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 16 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கையில் `ஹெலிகப்டரில் இருந்து தாக்குதல் நடத்தும் பிரிட்டிஷ் கூலிப்படையினர் தொடா்பு பட்டுள்ளமையும் இந்தப் புத்தகத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் லண்டனை தளமாக கொண்ட தமிழ் தகவல் மையம், ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவுடன் இது தொடர்பில் அண்மையில் தனியார் ஆயுதப்படை அமைப்பான KMS இடம் எழுப்பியுள்ளது.

அத்துடன் இலங்கையில் கூலிப்படைகள் நிகழ்த்திய படுகொலைகள் குறித்து பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திற்கு கடிதமும் எழுதியுள்ளது.

இந் நிலையிலேயே போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் சித்திரவதை ஆகியற்றுடன் KMS தனியார் ஆயுதப் படையினருக்கு உள்ள தொடா்பில் லண்டன் பெருநகர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இங்கலாந்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE